/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிராம மக்கள் வலியுறுத்தல்
/
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 21, 2025 06:14 AM
சேலம்: சேலம் அடுத்த, காரிப்பட்டி பெரியகவுண்டாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் மகேஸ்வரன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய, தி.மு.க., செயலர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் வழங்கிய மனு விபரம்:பெரியகவுண்டாபுரம் கிராமத்தில், பாரம்பரிய முறைப்படி ஆண்-டுதோறும் ஜல்லிக்கட்டு விழா நடந்து வருகிறது. நடப்பாண்டும், அரசு விதிமுறைக்கு உட்பட்டு, அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும்படி, ஊர்மக்கள்
சார்பில் கேட்டு கொள்-கிறோம். 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜல்லிக்கட்-டுக்கு அனுமதிக்க வேண்டும். விழாவுக்கான அனைத்து முன்-னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விதிமுறைகளை பின்பற்ற தயாராக
உள்ளோம்.இவ்வாறு கூறியுள்ளனர்.

