/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அண்ணாமலையார் கோவில் செல்லும் சாலையை சீரமைத்த கிராம மக்கள்
/
அண்ணாமலையார் கோவில் செல்லும் சாலையை சீரமைத்த கிராம மக்கள்
அண்ணாமலையார் கோவில் செல்லும் சாலையை சீரமைத்த கிராம மக்கள்
அண்ணாமலையார் கோவில் செல்லும் சாலையை சீரமைத்த கிராம மக்கள்
ADDED : நவ 22, 2025 01:22 AM
ஏற்காடு, ஏற்காடு, தலைசோலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாளன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபம் ஏற்றும் சமயத்தில், இங்குள்ள கோவிலில் தீபம் ஏற்றுவது வழக்கம். அன்றைய தினம் ஏராளமானோர் கோவிலுக்கு வருவர்.
இந்நிலையில் கோவிலுக்கு செல்லும் தார்ச்சாலை, பல்வேறு இடங்களில் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. சாலையை சீரமைத்து தரக்கோரி, அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. டிச., 3ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வர இருப்பதால், அண்ணாமலையார் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவர் என்பதால், அவர்களின் பாதுகாப்பு கருதி தலைச்சோலை ஊராட்சியை சேர்ந்த பாசிப்பள்ளம், தேக்கம்படி, பெலாகூடவு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கிராம மக்களிடம் பணம் வசூலித்து, தார்ச்சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். நேற்று கோவிலுக்கு செல்லும் சாலையில், வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சேதமடைந்துள்ள இடங்களில், கான்கிரீட் போட்டு சீர் செய்து வருகின்றனர்.

