/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸில் தேசிய கருத்தரங்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி

ADDED : ஏப் 21, 2025 07:19 AM
சேலம்: விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் வளாகம், சென்னை, பையனுார் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின், கண் ஒளியியல் பிரிவு மூலம் தேசிய அளவில் கருத்தரங்கு, செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சி, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி இரு நாட்கள் நடத்தப்பட்டன.
டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து தலைமை உரையாற்றினார். புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி இயக்குனர் ஆண்ட்ரூ ஜான், குறிப்புரை வழங்கினார். சென்னை சங்கர நேத்ராலயா கண் ஒளியியல் பிரிவு ஆலோசகர் கிருஷ்ணகுமார், எலைட் கண்ணொளியியல் கல்லுாரி பேராசிரியை ரஷிமா அசோகன், புதுச்சேரி அரசு மருத்துவமனை கண் நோய் பிரிவு நிபுணர் தணிகாசலம், பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
தொடர்ந்து மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சி சார்ந்த செயல்முறை திறன் மேம்பாட்டு பயிற்சி, கல்லுாரி கண்ணொளியியல் பிரிவு பேராசிரியர்கள் மூலம் நேரடியாக நடத்தப்பட்டது. கருத்தரங்கில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த கண்ணொளியியல் பிரிவு மாணவர்கள், கண் ஒளியியல் நிபுணர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். முடிவில் புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி கண்ணொளியியல் பிரிவு பொறுப்பாளர் வெண்ணிலா நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரியின் கண் ஒளியியல் பிரிவு பொறுப்பாளரான, பேராசிரியை தமிழ் சுடர், பேராசிரியை வெண்ணிலா, உதவி பேராசிரியை பானு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.