/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விடுதியில் சேர கைப்பந்து தேர்வு போட்டி
/
விடுதியில் சேர கைப்பந்து தேர்வு போட்டி
ADDED : மே 10, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : இந்திய விளையாட்டு ஆணைய சேலம் மையம் சார்பில் கேலோ இந்தியா திறனறியும் போட்டி, கடந்த, 7ல் தொடங்கியது.
அன்று கபடி, 8ல் கோ - கோ தேர்வு போட்டி நடந்தது. நேற்று கைப்பந்து தேர்வு போட்டி நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். விளையாட்டு திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இன்று கால்பந்து போட்டி நடக்கிறது. மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு, மாநில தேர்வு போட்டி நடத்தப்பட உள்ளது. அதில் தேர்ச்சி பெறுவோருக்கு விடுதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளன.