/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நடைபயிற்சி மேற்கொண்டால் இருதய பாதிப்பை தவிர்க்கலாம்
/
நடைபயிற்சி மேற்கொண்டால் இருதய பாதிப்பை தவிர்க்கலாம்
நடைபயிற்சி மேற்கொண்டால் இருதய பாதிப்பை தவிர்க்கலாம்
நடைபயிற்சி மேற்கொண்டால் இருதய பாதிப்பை தவிர்க்கலாம்
ADDED : செப் 29, 2024 01:04 AM
நடைபயிற்சி மேற்கொண்டால்
இருதய பாதிப்பை தவிர்க்கலாம்
சேலம், செப். 29-
உலக இருதய தினத்தையொட்டி, சேலம் கோகுலம் மருத்துவமனையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. மருத்துவமனை குழும மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தொடங்கி வைத்து பேசியதாவது:
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகைப்பழக்கம், உடல் உழைப்பின்மை, மாறிய உணவு பழக்கம், காற்று மாசு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இருதய பாதிப்புகள் ஏற்படுகின்றன. வாரம், 5 நாளாவது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கிய உணவு உட்கொள்வதோடு உடல் பருமனை குறைப்பது, பழங்கள், காய்கறி, சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், புகை, மது பழக்கத்தை கைவிடுதல், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்க்க வேண்டும். தியான பயிற்சி, நல்ல உறக்கம் போன்றவற்றால் இருதய பாதிப்பை தவிர்க்கலாம். 30 வயதுக்கு மேற்பட்டோர் எக்கோ, டிரெட்மில் போன்ற இருதய பரிசோதனையை ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஊர்வலம், முக்கிய சிகிச்சை பிரிவுகள் வழியே சென்று நிறைவு பெற்றது. இருதய நல மருத்துவர் நாகூர் மீரான், அறுவை சிகிச்சை மருத்துவர் விஜய ஆனந்த், மருத்துவர்கள் செல்லம்மாள், ஜெயதேவ், ராஜேஷ், கார்த்திகேயன், பிரபாகர், மோகன், பிரபு ராம்நாத், பாபு, சஞ்சய் உள்பட பலர் பங்கேற்றனர்.