/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கருணாநிதி குறித்து அவதுாறு: சீமான் மீது வழக்குப்பதிவு
/
கருணாநிதி குறித்து அவதுாறு: சீமான் மீது வழக்குப்பதிவு
கருணாநிதி குறித்து அவதுாறு: சீமான் மீது வழக்குப்பதிவு
கருணாநிதி குறித்து அவதுாறு: சீமான் மீது வழக்குப்பதிவு
ADDED : நவ 09, 2024 01:07 AM
கரூர், நவ. 9-
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, அவதுாறு பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
கரூர், தான்தோன்றிமலையை சேர்ந்தவர் தமிழ் ராஜேந்திரன், 62, வக்கீல். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவதுாறு பேசியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி, கரூர் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் கடந்த அக்., 7ல், தமிழ் ராஜேந்திரன் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு அக்., 14ல், விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி பரத்குமார், நா.த.கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை விசாரிக்க வேண்டும் என, தான்தோன்றிமலை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தியதின் அடிப்படையில், சீமான் மீது அவதுாறு பேசுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.