/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிரம்பும் ஆனைமடுவு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
/
நிரம்பும் ஆனைமடுவு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
நிரம்பும் ஆனைமடுவு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
நிரம்பும் ஆனைமடுவு அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : அக் 26, 2024 08:03 AM
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி நீர் தேங்கும்படி ஆனைமடுவு அணை உள்ளது. கடந்தாண்டு போதிய மழையின்றி அணை நிரம்ப-வில்லை. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் அணை நீர்-மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
இந்நிலையில் ஆனைமடுவு அணை மலைப்பகுதியில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இது, 15 செ.மீ., ஆக பதிவானது. இதன் எதிரொலியாக நேற்று, ஆணைமடுவு அணை நீர்மட்டம், 64.25 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து, 150 கன அடியாக இருந்தது.
இதனால் அணையில் எந்த நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால், கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை மூலம் எச்ச-ரிக்கை விடுக்கப்பட்டது. அதேநேரம் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்தனர்.
அதேபோல், 52.49 அடி உயரம் கொண்ட கரியகோவில் அணையில் நேற்று, 28.52 அடி உயரத்தில் தண்ணீர் இருந்தது. வினாடிக்கு, 51 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து வினா-டிக்கு, 23 கன அடி தண்ணீர்
வெளியேற்றப்பட்டது.