ADDED : செப் 25, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்ஸ்பெக்டருக்கு
பிடிவாரன்ட்
சேலம், செப். 25-
சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்த குணசேகரன் மனைவி கங்காதேவி, 41. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆதிமூலம், அவரது மகன்களுக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. இதில், 2020ல் தாக்குதல் நடத்தியதில் கங்காதேவி படுகாயம் அடைந்தார். இந்த வழக்கில் தலைவாசல் போலீசார் வழக்கு பதிந்து, ஆதிமூலம் உள்பட, 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் விசாரணை அதிகாரியாக இருந்த, இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியனுக்கு பலமுறை 'சம்மன்' அனுப்பியும் சாட்சிக்கு ஆஜராகவில்லை. நேற்றும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார்