/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1,000, 'கவரிங்' நகை திருட்டு மே.தா.,வில் கொள்ளையடித்த கும்பலா?
/
ரூ.1,000, 'கவரிங்' நகை திருட்டு மே.தா.,வில் கொள்ளையடித்த கும்பலா?
ரூ.1,000, 'கவரிங்' நகை திருட்டு மே.தா.,வில் கொள்ளையடித்த கும்பலா?
ரூ.1,000, 'கவரிங்' நகை திருட்டு மே.தா.,வில் கொள்ளையடித்த கும்பலா?
ADDED : செப் 03, 2025 02:30 AM
காரிப்பட்டி, சேலம் மாவட்டம் காரிப்பட்டி, சர்க்கார் நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 54. ஆழ்துளை குழாய் கிணறு டிரைவராக உள்ளார். அதே பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன், சர்க்கார் நாட்டாமங்கலம் பஸ் ஸ்டாப் பகுதியில் புது வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கும் அடிக்கடி சென்று குடும்பத்துடன் தங்கி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, புது வீட்டை பூட்டிச்சென்ற சக்கரவர்த்தி, நேற்று காலை, 8:00 மணிக்கு அங்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த
போது, 1,000 ரூபாய், 'கவரிங்' சங்கிலி திருடுபோனது தெரிந்தது. 'டிவி', ஹோம் தியேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரிக் பொருட்களை மூட்டை கட்டி, அங்கேயே வைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சக்கரவர்த்தி புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கூறுகையில், ''மேட்டுப்பட்டி தாதனுார், சர்க்கார் நாட்டாமங்கலம் ஆகிய இரு பகுதிகளிலும் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது,'' என்றார்.