/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் தந்தை கண்முன் மகள் பலி உயிரை பறித்தது லாரியா - பள்ளமா?
/
விபத்தில் தந்தை கண்முன் மகள் பலி உயிரை பறித்தது லாரியா - பள்ளமா?
விபத்தில் தந்தை கண்முன் மகள் பலி உயிரை பறித்தது லாரியா - பள்ளமா?
விபத்தில் தந்தை கண்முன் மகள் பலி உயிரை பறித்தது லாரியா - பள்ளமா?
ADDED : ஜூலை 07, 2025 03:58 AM
வாழப்பாடி: விபத்தில் தந்தை கண்முன் மகள் பலியான நிலையில், லாரி மோதியதில் விழுந்து இறந்தாரா அல்லது சாலை பள்ளத்தில் இறங்கியபோது தடுமாறி விழுந்த பின் லாரி ஏறி இறந்தாரா என்-பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 52. அதே பகுதியில் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார். இவரது மூத்த மகள் எம்.பி.ஏ., பட்டதாரி வித்யா, 25, இளைய மகள் எம்.எஸ்சி., பட்-டதாரி பிரியா, 23. இவர்கள், சேலத்தில் உள்ள உறவினரின் பிறந்-தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்று இரவு, 9:40 மணிக்கு வீட்டுக்கு, 'ஜூபிடர்' மொபட்டில் புறப்பட்டனர். ஹெல்மெட் அணிந்து, சிவப்பிரகாசம் ஓட்டினார்.சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி அருகே மத்துார் பிரிவு சாலையில் சென்றபோது, லாரி ஏறியதில் பிரியா தலை நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சிவப்பிரகா-சத்தின் கால், லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். வித்யா காயமின்றி தப்பினார்.
இதை அறிந்து அங்கு விரைந்து வந்த, ஏத்தாப்பூர் போலீசார், சிவப்பிரகாசத்தை வாழப்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்-பினர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ-மனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: மத்துார் பிரிவு சாலை அருகே சென்றபோது, பள்ளத்தில் மொபட்டை விட்டதில் நிலை தடுமாறி, 3 பேரும் விழுந்தனர். வலதுபுறம் பிரியா விழுந்தார். அப்போது வந்த லாரி, பிரியா மீது ஏறியது, விசாரணையில் தெரிந்தது. ஆனால் காயம் அடைந்த சிவப்பிரகாசம், லாரி மோதி-யதால் தடுமாறி விழுந்ததாகவும், பின் லாரி ஏறி மகள் இறந்ததா-கவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் லாரி டிரைவரும் தலைமறை-வாகியுள்ளார். இதனால் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்-வாறு அவர்கள் கூறினர்.