/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?
/
வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?
ADDED : ஜூலை 05, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டிபுதுாரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50. இவரது தோட்டத்தில், கால்நடைகளுக்கு வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தார்.
நேற்று மாலை, 5:00 மணிக்கு, அந்த கட்டுகள் தீப்பற்றி எரிந்தது. உடனே பன்னீர்செல்வம் தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், 5:30 மணிக்கு வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
இதில், 20,000 ரூபாய் மதிப்பில் வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமாகின. மர்ம நபர்கள் தீ வைத்ததாக, பன்னீர்செல்வம் அளித்த புகார்படி கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.