ADDED : அக் 17, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஸ் மோதி வாட்ச்மேன் பலி
வீரபாண்டி, அக். 17-
சேலம், சின்ன சீரகாபாடியை சேர்ந்தவர் தங்கவேல், 62. இவரது மனைவி பிரேமா. சீரகாபாடியில் உள்ள தனியார் கல்லுாரியில், தங்கவேல் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சீரகாபாடி பஸ் ஸ்டாப் அருகே, நடைபாதை வழியாக சாலையை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து, ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.