ADDED : செப் 22, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கேற்ப, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
அதன்படி நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 2,106 கன அடியாக இருந்த நிலையில், நேற்று, 747 கன அடியாக குறைந்தது.இதனால் நேற்று முன்தினம், 106.18 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 104.89 அடியாக குறைந்தது.
நேற்று காலை, அணை நீர் இருப்பு, 71.32 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.