/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கதவணை பராமரிப்பு நிறைவு காவிரியில் நீர்மட்டம் அதிகரிப்பு
/
கதவணை பராமரிப்பு நிறைவு காவிரியில் நீர்மட்டம் அதிகரிப்பு
கதவணை பராமரிப்பு நிறைவு காவிரியில் நீர்மட்டம் அதிகரிப்பு
கதவணை பராமரிப்பு நிறைவு காவிரியில் நீர்மட்டம் அதிகரிப்பு
ADDED : ஜூன் 12, 2025 01:41 AM
மேட்டூர், மேட்டூரில் இருந்து, 10 கி.மீ.,ல் உள்ள, செக்கானுார் காவிரி குறுக்கே, கதவணை நீர்மின் நிலையம் உள்ளது.
அதில் மேட்டூர் அணை அடிவாரம் வரை, காவிரி ஆற்றில், 0.45 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்படும். பராமரிப்பு பணி கடந்த மே, 9ல் தொடங்கியது. அதற்கு காவிரியில் தேக்கிய நீர், கீழ் பகுதிக்கு திறக்கப்பட்டது. கடந்த, 8ல் பராமரிப்பு பணி நிறைவடைந்தது. தொடர்ந்து, 9 முதல், கதவணையில் தண்ணீர் தேக்கும் பணி
தொடங்கியது.
தற்போது அணையில் இருந்து குடிநீருக்கு, 1,000 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றுவதால், கதவணை வரை, காவிரி ஆற்றில் சேமிக்கும் நீர் படிப்படியாக அதிகரிக்கிறது.
நேற்று காவிரியில், 70 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் சேமிக்கப்பட்ட நிலையில் இன்று டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் நாளை காலை கதவணை வரை நீர் முழுமையாக தேக்கப்படும் என, மின் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.