/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர் திறப்பு 1,000 கனஅடியாக அதிகரிப்பு; அணை மின் நிலையம் வழியாக திறப்பு

ADDED : பிப் 26, 2025 07:23 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் திறப்பு, 26 நாட்களுக்கு பின்பு வினாடிக்கு, 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த மாதம், 28ல் அணை நீர்மட்டம், 110.75 அடியாகவும், நீர் இருப்பு, 79.47 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அன்றைய தினம் வினாடிக்கு, 4,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு மாலை, 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டு குடிநீருக்காக, 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணை, சுரங்க மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணை, 8 கண் மதகு வழியாக காவிரியாற்றில் கடந்த, 26 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
குடிநீருக்கான தேவை அதிகரித்ததால் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு நீர் திறப்பு வினாடிக்கு, 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அந்த நீர், அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் கடந்த மாதம், 28ல் மாலை, 6:00 மணிக்கு அணை, சுரங்க மின் நிலையங்களில் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி முதல் மீண்டும் துவங்கியது. நேற்று அணை நீர்மட்டம், 109.33 அடி, நீர் இருப்பு, 78.16 டி.எம்.சி.,யாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 284 கனஅடி நீர் வந்தது.