/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலுவை வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு 'கட்'
/
நிலுவை வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு 'கட்'
நிலுவை வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு 'கட்'
நிலுவை வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு 'கட்'
ADDED : ஜூலை 04, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சந்திரகுமார் அறிக்கை:டவுன் பஞ்சாயத்தில், 2ம் அரையாண்டு சொத்து வரியை, வரும் செப்., 30க்குள் செலுத்தினால், 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
குடியிருப்புகள், வணிக வளாகங்கள், டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட கடைகள் ஆகியவை, நிலுவையில் உள்ள குடிநீர், சொத்து வரிகள், சுங்க வசூல் கட்டணத்தை விரைந்து செலுத்த வேண்டும்.அதற்கான எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது. தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைக்கு சீல் வைப்பு, மறு ஏலம் நடத்துதல் ஆகிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.