ADDED : ஆக 26, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், மேட்டூரில், மின்பராமரிப்பு பணி காரணமாக, ஆத்துாரில் ஒரு நாள் குடிநீர் வினியோகம் வழங்க இயலாது.
ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபாகமால் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆத்துார் நகராட்சிக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூரில் இன்று, (26ல்,) ஒரு நாள் மின் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், குடிநீர் வினியோகம் செய்ய இயலாது. ஆத்துார் நகர மக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.