ADDED : ஜன 03, 2026 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், சாரதா கல்லுாரி சாலை, இந்திய மருத்துவ சங்கம் அருகே, ஆர்.சி.சி., பிரதான குடிநீர் பம்பிங் முதன்மை குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று படம் வெளியா-னது. இந்நிலையில் அங்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படு-வதால், சேலம் மாநகர் பகுதிகளில், டிச., 3ல்(இன்று) மட்டும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என, சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

