நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு கடந்த நவ., 16ல் கும்பாபிேஷகம் நடந்தது. இன்று மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு, நேற்று, உலக நன்மை, மழை வேண்டி திரு
விளக்கு பூஜை நடந்தது. 600க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள், தீபம் ஏற்றி வழிபட்டனர்.
அவர்களுக்கு குங்குமச்சிமிழ், ஜாக்கெட், அரிசி, குங்குமம், மஞ்சள், தாலிக்கயிறு, வளையல் உள்ளிட்டவற்றை, தி.மு.க., கவுன்சிலர் ஜீவா, அறங்காவலர் குழு தலைவர் ஸ்டாலின் உள்-ளிட்ட உறுப்பினர்கள் வழங்கினர். மூலவர், வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்-கப்பட்டது.

