sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜி.ஹெச்.,ல் எலித்தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

/

ஜி.ஹெச்.,ல் எலித்தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

ஜி.ஹெச்.,ல் எலித்தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

ஜி.ஹெச்.,ல் எலித்தொல்லை கட்டுப்படுத்த வலியுறுத்தல்


ADDED : ஜன 03, 2026 07:29 AM

Google News

ADDED : ஜன 03, 2026 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகர கிழக்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலை-மையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், எலி பேஸ்ட் அட்டை, கூண்டுடன், நேற்று சேலம் அரசு மருத்துவம-னைக்கு வந்தனர். அவர்களிடம், அரசு மருத்துவமனை போலீசார் விசாரித்தபோது, டீனிடம் மனு வழங்க வந்ததாக தெரிவித்தனர்.

அதற்கு போலீசார், 'இது போன்று மனு வழங்க செல்ல கூடாது. 4 பேர் மட்டும் செல்லுங்கள்' என அறிவுறுத்தினர். இதையடுத்து, 4 பேர் சென்று, மருத்துவமனை டீன் தேவி மீனாளிடம் அளித்த மனு:

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுக்கு இடையூறாகவும், நோய் தொற்று ஏற்படுத்தும் விதமாகவும், நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக வைக்கப்படும் உணவு பொருட்கள் மீதும், உடைமைகள் மீதும், எலிகள் கூட்டம் கூட்ட-மாக வந்து செல்கின்றன.

உடனே நடவடிக்கை எடுத்து, எலிகளிடம் இருந்து நோயாளிக-ளையும், அதனால் ஏற்படும் தொற்றில் இருந்து பாதுகாக்கவும், எலிகளை பிடித்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us