/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனத்துறை பேச்சால் புகாரை திரும்ப பெற்ற இளநீர் வியாபாரி
/
வனத்துறை பேச்சால் புகாரை திரும்ப பெற்ற இளநீர் வியாபாரி
வனத்துறை பேச்சால் புகாரை திரும்ப பெற்ற இளநீர் வியாபாரி
வனத்துறை பேச்சால் புகாரை திரும்ப பெற்ற இளநீர் வியாபாரி
ADDED : ஆக 11, 2025 08:18 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே சந்தியூர் தாதன்காட்டை சேர்ந்த, இளநீர் வியாபாரி சந்தோஷ், 40. இவர் உள்ளிட்ட நண்பர்கள், கடந்த, 5ல் திப்பம்பட்டியில் கன்னி வைத்து காட்டுப்பன்றியை பிடித்தனர். சேலம் தெற்கு வனச்சரக அலுவலர்கள், 6 பேரை பிடித்து வழக்குப்பதிந்தனர். பின் 2.15 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்த பின் ஜாமினில் விடுவித்தனர்.
இந்நிலையில் மல்லுார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ், வனத்துறையினர் அடித்து துன்புறுத்தி பணம் பெற்றதாக, மல்லுார் போலீசில் புகாரளித்தார். இதுதொடர்பாக வனத்துறையினர் நடத்திய பேச்சில் சந்தோஷ் சமாதானம் அடைந்து, புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார். மேலும் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.