ADDED : மார் 13, 2024 07:28 AM
தலைவாசல் : சேலம் மாவட்டம் தலைவாசலில், வி.சி., சார்பில், 'வெல்லும் ஜனநாயக மாநாடு' தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் கருப்பையா தலைமை வகித்தார்.
அதில் பொதுச்செயலர் சிந்தனைச்செல்வன் பேசியதாவது:
கெங்கவல்லியில் புதிதாக பஸ் ஸ்டாண்ட், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைத்தல் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாயக்கன்பாளையம், ஒதியத்துாரில் மூடி வைத்துள்ள அம்பேத்கர் சிலைகளை திறக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
தி.மு.க., கூட்டணியில், வி.சி.,க்கு விழுப்புரம், சிதம்பரம் லோக்சபா தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் வி.சி., வேட்பாளர்கள், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவர். கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட, பானை சின்னத்தை மீண்டும் வழங்கும்படி கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

