ADDED : ஜன 20, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி: நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவிலில், 2024 ஜன., 24ல் கும்பாபிேஷகம் நடந்தது. அதன் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வரும், 22ல், 108 கலச பூஜை, முதல்கால பூர்ணாஹூதி தீபாராதனை நடக்க உள்ளது.
23ல், இரண்டாம் கால வேள்வி, சுதர்சன் ேஹாமம், மூலவருக்கு திருமஞ்சனம், அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு இரு கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கும். இரவு, 7:00 மணிக்கு சோமேஸ்வரர், லட்சுமி நரசிம்மர் சுவாமி திருவீதி உலா நடக்கும். தவிர ஆன்மிக இன்னிசை பாட்டு, பட்டிமன்றம் நடக்க உள்ளது.