/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரோடு-ஜோக்பானி இடையே வார சிறப்பு ரயில் இயக்கம்
/
ஈரோடு-ஜோக்பானி இடையே வார சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : செப் 17, 2025 01:57 AM
சேலம் :ஈரோடு-ஜோக்பானி (பீகார்) இடையே அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் வார சிறப்பு ரயில் வரும் 25 முதல் இயக்கப்படுகிறது.
அதன்படி வியாழன்தோறும் ஈரோட்டில், காலை, 8:10 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை இரவு, 7:00 மணிக்கு ஜோக்பானியை அடைகிறது. காலை, 9:02க்கு சேலம், 10:48 க்கு ஜோலார்பேட்டை
யில் நின்று செல்லும். மேலும் இந்த ரயில், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நாயுடுபேட்டை, கூடூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், மஞ்சிரியால், பல்ஹர்ஷா, சந்திராபூர், சேவாகிராமம், நாக்பூர், பெதுல், கோரடோங்கிரி, இடார்சி, பிபரியா, கதர்வஹர்த்னி, மாணிக்பூர், டபவ்ரா, ஜஸ்ரா, பிரயாக்ராஜ், சியோகி, விந்தியாச்சல், சுனார், பண்டிட், தீன் தயாள் உபாத்யாயா, பக்சர், ரகுநாத்பூர், ஆரா, டானாபூர், பாடலிபுத்ரா, சோன்பூர், ஹாஜிபூர், பட்டோரி, பரெளினி, பெகுசராய், ககாரியா, மான்சி, நவுகாச்சியா,
கதிஹார், பூர்னியா, அராரியா கோர்ட், போர்ப்ஸ்கஞ்ச் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.மறு மார்க்கத்தில், வரும் 28 முதல், ஜோக்பானி - ஈரோடு அம்ரித் பாரத் வார சிறப்பு ரயில், ஞாயிறுதோறும், மாலை, 3:15 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை காலை,7:20 மணிக்கு ஈரோட்டை வந்தடைகிறது. இந்த ரயில், புதன்கிழமை அதிகாலை, 3:25க்கு ஜோலார்பேட்டை, 5:27 க்கு சேலத்தில் நின்று செல்லும். அதற்கான முன்பதிவுகள் காலை, 8:00 மணிக்கு தொடங்கும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.