/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விமான நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு
/
விமான நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 12, 2024 07:22 AM
ஓமலுார்: ஊரக பகுதிகளில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, தர்மபுரியில் தொடங்கி வைக்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை, 10:25 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார்.அவரை அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், கலெக்டர் பிருந்தாதேவி, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், சேலம் எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் வரவேற்றனர்.தொடர்ந்து விமான நிலையம் வெளியே கட்சியினர், தொழிற்சங்க உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர். பின் காரில் தர்மபுரிக்கு புறப்பட்டார். அங்கு விழா முடிந்து மதியம், 12:45க்கு மீண்டும் சேலம் விமான நிலையம் வந்த அவர், அதே விமானம் மூலம் சென்னை சென்றார்.
கனரக வாகனங்கள் நிறுத்தம்
முதல்வர் வருகையால் நேற்று காலை, 9:00 மணி முதல், சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் கனரக வாகனங்கள் இயக்க தடை செய்யப்பட்டு, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.குறிப்பாக தொப்பூரில் நீண்ட துாரத்துக்கு கனரக வாகனங்கள் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டிருந்தன. மதியத்துக்கு பின் வழக்கம்போல் இயக்க அனுமதிக்கப்பட்டன.