/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குட்டப்பட்டி ஊராட்சி மக்களுக்கு ரூ.92 லட்சத்தில் நல உதவி வழங்கல்
/
குட்டப்பட்டி ஊராட்சி மக்களுக்கு ரூ.92 லட்சத்தில் நல உதவி வழங்கல்
குட்டப்பட்டி ஊராட்சி மக்களுக்கு ரூ.92 லட்சத்தில் நல உதவி வழங்கல்
குட்டப்பட்டி ஊராட்சி மக்களுக்கு ரூ.92 லட்சத்தில் நல உதவி வழங்கல்
ADDED : ஜூன் 27, 2025 01:25 AM
மேட்டூர், மேச்சேரி, குட்டப்பட்டி ஊராட்சியில், அரசு சார்பில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. அதில் கலெக்டர்
பிருந்தாதேவி, 22 பேருக்கு நத்தத்தில் பட்டா, 7 பேருக்கு வீட்டுமனை பட்டா, 40 பேருக்கு புது ரேஷன் கார்டு, 26 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவி தொகை என, 144 பயனாளிகளுக்கு, 92.69 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வகணபதி, தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார். பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், 'அரசின், 100 ஏரிகள் உபரிநீர் திட்டத்தில், மேச்சேரி ஒன்றியம் எரகுண்டப்பட்டி, புக்கம்பட்டி, காமனேரி ஏரிகளை சேர்க்க வேண்டும்' என, அரசுக்கு வலியுறுத்தினார். சுகாதாரம், கால்நடை, தோட்டக்கலை துறைகள் சார்பில் வைத்திருந்த கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், தி.மு.க.,வின், நங்கவள்ளி ஒன்றிய செயலர் அர்த்தநாரீஸ்வரன், வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து செயலர் முருகன் உள்பட பலர்
பங்கேற்றனர்.