/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 ,711 தொழிலாளருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
2 ,711 தொழிலாளருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மே 22, 2025 01:34 AM
சேலம், சேலத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு உதவி தொகை, விபத்து மரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, விபத்து ஊனம் ஆகியவற்றுக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன. ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வீட்டு வசதி திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்படுகின்றன. தற்போது, 2,711 பயனாளிகளுக்கு, 1.18 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் பேசுகையில், ''தொழிலாளர் நல வாரியங்களில் கடந்த, 4 ஆண்டுகளில், 20 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 15 லட்சம் பேருக்கு, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார். கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் புனிதவதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.