/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
314 பேருக்குநலத்திட்ட உதவி வழங்கல்
/
314 பேருக்குநலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஏப் 23, 2025 01:13 AM
தலைவாசல்:தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி ராமசேஷபுரத்தில், 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சி குறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:ராமசேஷபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு, 2024 ஆக., 28ல் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தாட்கோ மூலம், 11.76 லட்சம் ரூபாய்; வேளாண்
துறை, 1.65 கோடி; ஊரக வளர்ச்சி திட்டத்தில், 21 வீடுகள் சீரமைப்புக்கு, 11.50 லட்சம்; கலைஞர் கனவு இல்லத்தில், 33 பேருக்கு, 1.09 கோடி; மகளிர் சுய உதவிக்குழுவுக்கு, 91.75 லட்சம் ரூபாய் கடனுதவி உள்பட, 314 பயனாளிகளுக்கு, 4.04 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பயன் அடைந்தவர்களிடம், மேலும் அரசு உதவிகள் குறித்து கேட்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
தோட்டக்கலை துணை இயக்குனர் மஞ்சுளா, தாட்கோ மாவட்ட மேலாளர் ராமதாஸ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

