/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்சி, வேட்பாளர்களுக்கு நடத்தை விதிகள் என்ன?
/
கட்சி, வேட்பாளர்களுக்கு நடத்தை விதிகள் என்ன?
ADDED : மார் 21, 2024 01:31 AM
சேலம், லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்குமான நடத்தை விதிகள் குறித்து சேலம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பல்வேறு ஜாதி, இனம், மதம், மொழியை சார்ந்த மக்கள் உள்ளனர். இவர்களிடையே வேறுபாடுகளை தீவிரமாக்கும்படியான செயலிலோ, ஒருவருக்கு ஒருவர் இடையில் வெறுப்பை உருவாக்கும்படி, பதற்றத்துக்கு வழி செய்யும் எந்த செயலிலும் எந்தவொரு கட்சியோ, வேட்பாளரோ ஈடுபடக்கூடாது. பிற கட்சிகளை சார்ந்த தலைவர்கள், தொண்டர்களின் பொது வாழ்க்கையோடு தொடர்பற்ற, சொந்த வாழ்க்கையை பற்றிய விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். பிற கட்சியினர் மீதான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு, முறைகேடு குறித்த விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
தனி நபருக்கு சொந்தமான இடங்கள், கட்டடங்கள், சுற்றுச்சுவர்களில் அவர்களின் அனுமதியின்றி கொடி கம்பங்கள் நடுதல், பதாகை வைத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், பரப்புரை வாசகங்களை எழுதுதல் போன்ற செயல்களை செய்ய, அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது.
தொண்டர்களால் பிற கட்சியினர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் எந்த இடையூறும் தடங்கலும் ஏற்படாது என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஒரு கட்சியினர், ஓரிடத்தில் கூட்டத்தினை நடத்திக்கொண்டிருக்கும்போது, அந்த வழியாக பிற கட்சியினரின் ஊர்வலங்கள் நடத்தப்படக்கூடாது. ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்றொரு கட்சியின் தொண்டர்கள் அகற்றக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

