/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாம்பு விழும்போது கருடன் கவ்விச்செல்லும்: அண்ணாமலை குறித்து செம்மலை பேச்சு
/
பாம்பு விழும்போது கருடன் கவ்விச்செல்லும்: அண்ணாமலை குறித்து செம்மலை பேச்சு
பாம்பு விழும்போது கருடன் கவ்விச்செல்லும்: அண்ணாமலை குறித்து செம்மலை பேச்சு
பாம்பு விழும்போது கருடன் கவ்விச்செல்லும்: அண்ணாமலை குறித்து செம்மலை பேச்சு
ADDED : ஆக 28, 2024 07:27 AM
ஆத்துார்: ''சிவன் கழுத்தில் உள்ள பாம்பு போன்று அண்ணாமலை உள்ளார். வானத்தில் உள்ள கருடன் போன்று, அ.தி.மு.க., உள்ளது. நம்மைப்பார்த்து, 'கருடா சவுக்கியமா' என பாம்பு கேட்கிறது. அதே பாம்பு விழும்போது கருடன் கவ்விச்செல்லும்,'' என, அ.தி.மு.க., அமைப்பு செயலர் செம்மலை பேசினார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சியில், 11, 12வது வார்டுகளை சேர்ந்த, அ.தி.மு.க., புது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா அங்குள்ள கோட்டையில் நேற்று நடந்தது. அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன், இ.பி.எஸ்., நிர்வாக திறமையாக ஆட்சி செய்கிறார் என புகழ்ந்து பேசிய அண்ணாமலை, தற்போது தவறாக பேசுகிறார். அது வேற வாய். இப்ப என்ன வாய். கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு. இல்லை என்றால் ஒரு பேச்சு. கருணாநிதி நாணயம் வெளியிட, பா.ஜ.,வை அழைத்து, தி.மு.க., விழா நடத்தி அதன் கூட்டணி கட்சிகளை ஏமாற்றியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அமைப்பு செயலர் செம்மலை பேசுகையில், ''சிவன் கழுத்தில் உள்ள பாம்பு போன்று அண்ணாமலை உள்ளார். வானத்தில் உள்ள கருடன் போன்று, அ.தி.மு.க., உள்ளது. நம்மைப்பார்த்து, 'கருடா சவுக்கியமா' என, பாம்பு கேட்கிறது.அதே பாம்பு விழும்போது கருடன் கவ்விச்செல்லும். இ.பி.எஸ்., வளர்ச்சியை பார்த்து அண்ணாமலைக்கு அச்சம் வந்ததால் அவரை பேசி, செல்வாக்கை உயர்த்திக்கொள்ள விரும்புகிறார்,'' என்றார்.
'அதிகார திமிரின் பேச்சு'
தொடர்ந்து செம்மலை நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட கட்சிகளை ஒழிப்பேன் என சொல்லும் அண்ணாமலை, பா.ஜ.,வை தமிழகத்தில் ஒழிக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும். எங்களை ஒழிப்பேன் என சொல்லுவது, எட்டாக்கனிக்கு கொட்டாவி விடுவது போன்று அவரது பேச்சு அமைந்துள்ளது. பா.ஜ., துணைத்தலைவர் கரு.நாகராஜன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மீதான வழக்குகளை நீதிமன்றத்தில் துரிதப்படுத்துவதாக கூறியுள்ளது, ஆட்சியில் இருக்கிற அதிகார திமிரின் பேச்சாக பார்க்கிறோம்.
எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது. ஒரு தேசியக்கட்சி தலைவராக இருந்துகொண்டு, இ.பி.எஸ்.,ஐ அவதுாறாக பேசினால் கட்சியினர் வழக்கு தொடரத்தான் செய்வர். அதை அண்ணாமலை சந்தித்துதான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.