/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அசல் வீட்டு மனை பத்திரம் எப்போது? தாயகம் திரும்பியோரின் வாரிசுகள் தவிப்பு
/
அசல் வீட்டு மனை பத்திரம் எப்போது? தாயகம் திரும்பியோரின் வாரிசுகள் தவிப்பு
அசல் வீட்டு மனை பத்திரம் எப்போது? தாயகம் திரும்பியோரின் வாரிசுகள் தவிப்பு
அசல் வீட்டு மனை பத்திரம் எப்போது? தாயகம் திரும்பியோரின் வாரிசுகள் தவிப்பு
ADDED : டிச 05, 2024 07:39 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டை, காமராஜர் சாலை, சாஸ்திரி நகர் பகுதி மக்கள், கோரிக்கை பேனர் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: எங்கள் மூதாதையர் இலங்கை சென்று, 1976ல் தாயகம் திரும்பி, சாஸ்திரி நகரில் வசித்-தனர். அப்போது அவர்களுக்கு, மானியத்துடன் கூடிய கடனாக, 6,000 ரூபாய், சிலருக்கு, 10,000 ரூபாய்
வீதம் கடனுதவி வழங்கப்-பட்டன. அதற்கு ஈடாக வீட்டுமனை பத்திரத்தை, அப்போதைய மாவட்ட நிர்வாகம்
பெற்றுக்கொண்டது. பின் மானிய கடன் தள்-ளுபடி செய்யப்பட்டது. எனினும் அதற்கு ஈடாக பெறப்பட்ட
வீட்டுமனை பத்திரம், 45 ஆண்டுகளாகியும் திருப்பி வழங்கப்ப-டாததால், அவர்களது வாரிசுகளான, 122
பேர் பாதிக்கப்பட்டு வரு-கிறோம். ஒருவருக்கு தலா, 1,250 சதுரடி மனை வீதம், மொத்தம், 4.90 ஏக்கர் நிலத்துக்கு அசல் பத்திரம் வழங்க வேண்டும்.
வில்லங்க சான்றில், கடன் தொகை ஈடு அடமானம் எனும் பெயரில் வரு-வதால், அதில் திருத்தம் செய்து அசல்
வீட்டுமனை பத்திரம் வேண்டி, முதல்வருக்கு புகார் அனுப்பினோம். அதையேற்று அசல் வீட்டுமனை பத்திரம்,
ரேஷன் கார்டு வழங்க, கடந்த பிப்., 20ல் உத்தரவு பிறக்கப்பட்டது. அந்த உத்தரவை, மாவட்ட நிர்-வாகம்
செயல்படுத்தாமல் உள்ளது. அதை விரைவாக செயல்ப-டுத்த வேண்டி திரும்ப மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.