/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடுக்குமாடி குடியிருப்பை எப்போ தருவீங்க... அமைச்சர்களை சூழ்ந்து பெண்கள் கேள்வி
/
அடுக்குமாடி குடியிருப்பை எப்போ தருவீங்க... அமைச்சர்களை சூழ்ந்து பெண்கள் கேள்வி
அடுக்குமாடி குடியிருப்பை எப்போ தருவீங்க... அமைச்சர்களை சூழ்ந்து பெண்கள் கேள்வி
அடுக்குமாடி குடியிருப்பை எப்போ தருவீங்க... அமைச்சர்களை சூழ்ந்து பெண்கள் கேள்வி
ADDED : ஆக 21, 2025 02:25 AM
சேலம், சேலம், பெரியார் நகரில், நகர்புற மேம்பாட்டு வாரியத்தில், 27.18 கோடி ரூபாய் மதிப்பில், 280 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடக்கிறது. அப்பணியை, தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது பெண்கள் சூழ்ந்துகொண்டு, '8 ஆண்டாக இப்பணி நடக்கிறது. எப்போது தான் முடித்து ஒப்படைக்கப்போகிறீர்கள்' என கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அன்பரசன், 'விரைவில் பணி முடிந்து விடும். அனைவரும் புது வீட்டில் குடியேறலாம்,' என்றார்.
பெண்கள், 'ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், இதே பதிலை தான் கூறுகின்றனர். ஆனால் இதுவரை பணியை முடிக்கவில்லை' என்றனர். பின் போலீசார் சமாதானம் செய்து விலக்கி, அமைச்சர்களை அனுப்பினர்.
அதேபோல் அல்லிக்குட்டை நகரில், 49.25 கோடி ரூபாயில் கட்டப்படும், 504 அடுக்குமாடி குடியிருப்புகள்; பழைய பஸ் ஸ்டாண்ட் காந்தி நகரில், 27.19 கோடியில், 280 அடுக்குமாடி குடியிருப்பு; நேரு நகரில், 38.06 கோடி ரூபாயில், 392 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை, அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் அன்பரசன், அனைத்து அடுக்குமாடி குடியிருப்பு பணிகளையும், நவம்பருக்குள் முடித்து பயனாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டார்.
முன்னதாக கந்தம்பட்டியில் புது தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில், 19.42 கோடி ரூபாய் கடன் பெற்று நடத்தும் பிளக்ஸ் தொழில் நிறுவனத்தை பார்வையிட்டனர். தொழில்துறை கமிஷனர் நிர்மல்ராஜ், கலெக்டர் பிருந்தாதேவி, நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.