/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 80 வயது மூதாட்டி பைக்கில் அழைத்து சென்ற காம கொடூர வாலிபர் யார்?
/
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 80 வயது மூதாட்டி பைக்கில் அழைத்து சென்ற காம கொடூர வாலிபர் யார்?
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 80 வயது மூதாட்டி பைக்கில் அழைத்து சென்ற காம கொடூர வாலிபர் யார்?
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 80 வயது மூதாட்டி பைக்கில் அழைத்து சென்ற காம கொடூர வாலிபர் யார்?
ADDED : ஜன 02, 2025 07:27 AM
ஓசூர்: ஓசூரில், 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை பைக்கில் வனப்ப-குதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலி-பரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர், 80 வயது மூதாட்டி. கணவர் இறந்த நிலையில் கடந்த, 6 மாதமாக ஓசூர் பஸ் ஸ்டாண்டில் தங்கியிருந்து, பயணிகளிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஓசூர் பஸ் ஸ்டாண்டில் மூதாட்டி தான் வழக்கமாக துாங்கும் பகுதியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், மூதாட்டி-யிடம் ஏதோ பேசி அவரை பைக்கில் ஓசூர் அருகே பேரண்டப்-பள்ளி வனப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பின் மூதாட்டியை அங்கேயே விட்டு, பைக்கில் தப்பி சென்றார். மூதாட்டி வழி தெரியாமல் தவித்த நிலையில், அவ்வ-ழியாக வந்த வாகன ஓட்டிகள், 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்தவர்கள், மூதாட்டியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.மூதாட்டிக்கு ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார். அவருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. ஓசூர் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள சிசி-டிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து, மூதாட்டியை அழைத்து சென்ற வாலிபர் யார் என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி தெலுங்கு மொழி பேசுகிறார். நடந்த விபரங்களை போலீசாரிடம் கூறவே முடியாத அளவிற்கு மூதாட்டி அதிர்ச்சியில் உள்ளார். ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் பலாத்-கார வழக்குப்பதிந்து, வாலிபரை தேடி வருகின்றனர்.

