sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிராமத்தில் செத்து கிடந்த சிறுத்தை கொன்றவர்கள் யார்? மர்மம் நீடிப்பு

/

கிராமத்தில் செத்து கிடந்த சிறுத்தை கொன்றவர்கள் யார்? மர்மம் நீடிப்பு

கிராமத்தில் செத்து கிடந்த சிறுத்தை கொன்றவர்கள் யார்? மர்மம் நீடிப்பு

கிராமத்தில் செத்து கிடந்த சிறுத்தை கொன்றவர்கள் யார்? மர்மம் நீடிப்பு


ADDED : அக் 01, 2024 07:20 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: தின்னப்பட்டி ஊராட்சியில், உலா வந்த சிறுத்தையை துப்பாக்-கியால் சுட்டு கொன்ற மர்மநபர்கள் யார் என்ற மர்மம் நான்கு நாட்களாக நீடிக்கிறது.

சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியம், தின்னப்பட்டி ஊராட்சி பகுதியில் புகுந்த சிறுத்தை கடந்த, 25 நாட்களாக, 15 ஆடு, 10 கோழிகளை வேட்டையாடியது. வனத்து-றையினர் தின்னப்பட்டி ஊராட்சியில், ஐந்து இடங்களில் கூண்-டுகள் வைத்தும், 15 இடங்களில் கேமராக்கள் பொருத்தியும் சிறுத்தை சிக்க-வில்லை. கடந்த, 24 இரவு நாயம்பாடி கொட்டாய் கணேசன், 35, என்பவரின் இரு ஆடுகளை கடித்து கொன்றது.

அதன் பின், சிறுத்தை கிராமங்களில் நுழையாத நிலையில் கடந்த, 27ல் வெள்ளக்கரட்டூர் முனியப்பன் கோவில் கரடு பகுதியில் அழுகிய நிலையில் செத்து கிடந்தது. அன்று காலை, 10:00 மணிக்கு சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங் ரவி, உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், மேட்டூர் வனச்சரகர் சிவா-னந்தன் சம்பவ இடத்துக்கு சென்றனர். வனத்துறை மருத்துவர், கால்நடை மருத்துவர்கள் என மூவர், அழுகிய நிலையில் முடிகள் உதிர்ந்து கிடந்த சிறுத்தையை வெட்டி பரிசோதனை செய்தனர். சிறுத்தை உடலில் இருந்து துப்-பாக்கி குண்டுகள் எடுத்த நிலையில், அதன் உடலிலும் தாக்கப்-பட்ட காயங்கள் இருந்தன. அதனை சுட்டது யார். அடித்தது யார் என்ற மர்மம் கடந்த நான்கு நாட்களாக நீடிக்கிறது.இது குறித்து, வனத்துறை அலுவலர்கள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us