/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க.,வை த.வெ.க., எதிர்க்காதது ஏன்? சேலம் கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சு
/
அ.தி.மு.க.,வை த.வெ.க., எதிர்க்காதது ஏன்? சேலம் கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சு
அ.தி.மு.க.,வை த.வெ.க., எதிர்க்காதது ஏன்? சேலம் கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சு
அ.தி.மு.க.,வை த.வெ.க., எதிர்க்காதது ஏன்? சேலம் கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சு
ADDED : ஜூலை 22, 2025 01:25 AM
சேலம், த.வெ.க., மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில பொது செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் பேசுகையில்,'' மக்களை பிளவுபடுத்தும் மதவாத அரசியலை புறக்கணிக்க வேண்டும். தனியார் பள்ளிகளும், அரசு பள்ளிகளும் சமமாக இல்லை. சமூக நீதி பேச தி.மு.க.,விற்கு அருகதை இல்லை,'' என்றார்.
தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில்,'' தற்போது தி.மு.க.,வில், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் உள்ளனர். பேசி பேசி வளர்ந்த தி.மு.க.,விற்கு இப்போது பேச ஆள் இல்லை. அதனால் தான் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பேச தி.மு.க., பயன்படுத்துகிறது. தி.மு.க.,வின் ஊழல்தான் பா.ஜ.,வை வளர்த்து வருகிறது. அ.தி.மு.க.,வை ஏன் எதிர்க்கவில்லை என கேட்கிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியின் போது நீட் தேர்வு, சி.ஏ.ஏ.,க்கு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அ.தி.மு.க.,வை ஏன் எதிர்க்கவில்லை என்றால், அந்த தொண்டர்கள் அனைவரும் த.வெ.க.,வில் இணைந்து விட்டார்கள் என்பதால்தான். இன்று பா.ஜ.,வை உறுதியாக எதிர்ப்பவர் விஜய்தான். குரான் மீது ஆணையாக எந்த காலத்திலும் பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என உறுதியளிக்கிறோம். முதல்வர் வேட்பாளர் விஜய்தான். எங்கள் நிலைப்பாட்டை, கொள்கையை தெளிவாக சொல்லி விட்டோம். இவ்வாறு பேசினார்.
த.வெ.க., பொது செயலாளர் ஆனந்த் பேசியதாவது:
மற்ற கட்சியில் பணம் மற்றும் இதர விஷயங்கள் கொடுத்தால்தான் கூட்டம் வருகிறது. த.வெ.க.,வில் மட்டும் தன்னார்வத்துடன் வருகின்றனர். இனி வரும் நாட்களில், 10 இடங்களில் பிரம்மாண்ட முறையில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படும். 2026ல் முதல்வராக விஜய் வருவது உறுதியாகி விட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. பல ஆண்டுகள் பொறுத்த மக்கள் இன்னும், 8 மாதம் பொறுத்தால் போதும். விஜய் முதல்வரானவுடன் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். நெசவாளர் நல வாரியம் த.வெ.க., ஆட்சியில் அமைக்கப்படும். விவசாயிகளின் நிலத்தை எடுத்து, பரந்துார் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விஜய் போராட்டம்
நடத்தினார்.
விமான நிலையம் வரக்
கூடாது என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் தேவையறிந்து பல்வேறு மாவட்டங்களிலும் ஏராளமானவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். 2026ம் ஆண்டு த.வெ.க., ஆட்சி அமைத்து விஜய் முதல்வராவார். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

