/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்டத்தில் பரவலாக மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
மாவட்டத்தில் பரவலாக மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் பரவலாக மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் பரவலாக மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 03, 2024 06:55 AM
சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் மக்-களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்துார், கல்வராயன்மலை சுற்றுவட்டார பகுதியில், இரு
தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கரியக்-கோவில் மற்றும் ஆணைமடுவு
அணைகளில் இருந்து உபரி நீர், கல்வராயன்மலை நீரோடைகளில் இருந்து வரும்
தண்ணீரால், 15 ஆண்டுகளுக்கு பின் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்-டுள்ளது.
நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் நரசிங்கபுரம் அணைமேடு தடுப்பணை
பகுதியில் உள்ள என்.வி. நகர், எம்.ஜி.ஆர். நகர், முல்-லைவாடி பகுதியில் உள்ள, 150க்கும்
மேற்பட்ட குடியிருப்பு வீடு-களில் மழை நீர் புகுந்தது. தெருக்களில் மழை நீர் ஆறு
போல் ஓடியது. இங்குள்ள, 200க்கும் மேற்பட்டவர்களை, வருவாய்த்து-றையினர்
மீட்டு, ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைத்து,
உணவு வழங்கப்படுகிறது.
மேலும் முல்லைவாடியில், வசிஷ்ட நதி குறுக்கே கட்டப்பட்-டுள்ள தரைப்பாலம்
மற்றும் நடை பாதை பாலம் என, இரண்டு பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது.
இப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
சுற்றி செல்லும் மக்கள்
மழையால், வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் நீர் வரத்து
அதிகரித்து, மூன்று மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வசிஷ்ட நதி
ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து, நேற்று முன்தினம் வாழப்பாடி
அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துமேடு பகுதியில், வசிஷ்ட நதி குறுக்கே
இருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால், அப்பகுதியினர் நீண்ட
துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வெள்ள அபாயம்
இடைப்பாடி தாலுகா, கொங்கணாபுரம் அருகே உள்ள வெள்ளாள-புரம் ஏரியில்,
பாதிக்கும் மேல் தண்ணீர் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக, பெய்த பலத்த
மழையால் வெள்ளாளபுரம் ஏரி நேற்று மாலை நிரம்பி வழிந்தது. ஏரியில் இருந்து
வெளியேறும் தண்ணீர், சரபங்கா ஆற்றில் செல்வதால் சரபங்கா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
பயிர்கள் சேதம்
* வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பா-ளையம் பகுதியில்,
இரண்டு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்கிறது. பல்வேறு இடங்களில்
பயிர்கள், நீரில் மூழ்கி சேதம-டைந்துள்ளது. அதேபோல், மக்காச்சோளம், கரும்பு
உள்ளிட்-டவை சாய்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டம்
ஏற்பட்டுள்ளதால், உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று வேளாண்மை துறை, வருவாய் துறை
அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்தனர்.* தேவூர் அருகே அரசிராமணி, மேட்டுப்பாளையம், குள்ளம்-பட்டி, பூமணியூர்,
செட்டிபட்டி, பொன்னம்பாளையம், தண்ணித்-தாசனுார் உள்ளிட்ட பகுதிகளில்
விவசாயிகள் பல்வேறு நெல் ரகங்கள் சாகுபடி செய்துள்ளனர்.
நெல் விளைச்சல் அடையும் தருணத்தில், தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், பயிர்கள்
அடியோடு சாய்ந்து சேதமடைந்துள்ளது.
10 குடும்பத்தினர் மீட்புஓமலுார் அருகே, பல்பாக்கி கிராமத்தில் நாடார் தெருவில் உள்ள, 10க்கும் மேற்பட்ட
வீடுகள் சரபங்கா ஆறு அருகே கட்டப்பட்டி-ருந்தது.நேற்று வெள்ளப்பெருக்கு காரணமாக, அனைத்து வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது.
வருவாய்த்துறையினர், ஓமலுார் தீயணைப்புத்-துறை உதவியுடன், 10
குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டு, ஐந்து குடும்பத்தினரை சமுதாய கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.
* பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, ஓலப்பாடி ஏரிக்கரையில் பழமைவாய்ந்த
ஆலமரம், நேற்று காலை சாலையின் நடுவே மின்கம்பம் மீது விழுந்தது.உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.
மூன்று மணி நேரத்திற்கு பிறகு மரத்தை வெட்டி, சாலையிலிருந்து
அப்புறப்படுத்தினர்.
* மேட்டூர் அடுத்த நவப்பட்டி ஊராட்சி, நாட்டாமங்கலத்தில் விவசாயி ஜெயராமனின்
ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமானது.மூழ்கிய தரைப்பாலம்ஏற்காடு மலையில் இருந்து வழியும் மழை நீர், கன்னங்குறிச்சி புதுஏரி மற்றும் பழைய
ஏரிகள் நிரம்பி வழிந்து திருமணிமுத்-தாற்றில் பாய்கிறது. இது தவிர, சேலம் மாநகரின்
சாக்கடை கழிவு-நீரும் மழை நீருடன் கலந்து, சிறு ஓடையாக ஓடிக் கொண்டிருந்த
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தொட்-டபடி
தடுப்பணைகளில் செந்நிறமாக வழிந்தோடியது.
சேலம் நெய்காரப்பட்டி அருகே, நான்கு வழிச்சாலை பட்டர்-பிளை மேம்பாலத்தில்
இருந்து ஆற்றில் தண்ணீர் கரை புரண்-டோடியது. வீரபாண்டி அருகே, இனாம் பைரோஜி
புதுப்பாளை-யத்தில் இருந்து மின்னக்கல் வழியாக வெண்ணந்துார் செல்லும் சாலையில்,
திருமணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் கழிவுநீரால்
மூழ்கியது.மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டது.
நமது நிருபர் குழு -