ADDED : ஆக 06, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், :காடையாம்பட்டி, மாரக்கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் வெங்கடாசலம், 45. இவரது மனைவி வனிதா, 38. இருவரும் காமலாபுரத்தில் உள்ள வெல்ல ஆலையில் பணிபுரிந்தனர். நேற்று இரவு, 7:20 மணிக்கு, பணி முடிந்து தம்பதியர், 'ஆக்டிவா' மொபட்டில் புறப்பட்டனர். வெங்கடாசலம் ஹெல்மெட் அணியாமல் ஓட்டினார்.
குப்பூர் அருகே சென்றபோது, சேலத்தில் இருந்து வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய வனிதா, வலதுபுறம் விழுந்ததில், லாரி சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி, நிற்காமல் சென்றது. காயமடைந்த வெங்கடாசலம், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.