நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி : கெங்கவல்லி வனச்சரகம் சார்பில் வன உயிரின வார விழா, கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. வனச்சரகர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
அதில் வன உயிரின பாதுகாப்பு, மரக்கன்று நடுவதன் அவசியம், அரிய வகை வன விலங்குகள் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமை ஆசிரியர் சாமுவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள், வனக்காப்பாளர் சையத்அலி உள்பட பலர் பங்கேற்றனர்.