/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நடப்பாண்டில் 3ம் முறையாக மேட்டூர் அணை நிரம்புமா?
/
நடப்பாண்டில் 3ம் முறையாக மேட்டூர் அணை நிரம்புமா?
ADDED : டிச 09, 2024 07:20 AM

மேட்டூர்: தமிழகம் - கர்நாடகா எல்லையில், காவிரி நீர் பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த மழையால், மேட்டூர் அணைக்கு கடந்த, 3ம் தேதி, 9,236 கனஅடியாக இருந்த நீர்வரத்து, அன்றிரவு, 29,021 கன அடியாக, மறுநாள், 32,240 கனஅடியாக அதிகரித்தது. மழை குறைந்ததால் நேற்று முன்தினம், 9,601 கன அடியாக, நேற்று, 7,691 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து, 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
அணை நீர்மட்டம் நேற்று, 116.13 அடியாக இருந்தது. அணை முழு கொள்ளளவான, 120 அடியை எட்ட, 3.5 அடி நீர் மட்டுமே தேவை. மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால், நடப்பாண்டில் மூன்றாவது முறையாக, மேட்டூர் அணை நிரம்பும்.
கபினி நீர் திறப்பு நிறுத்தம்
கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணை நீர்மட்டம், 65 அடி. அணைக்கு நேற்று முன்தினம், 995 கன அடியாக இருந்த நீர்வரத்து, 1,261 கன அடியாக நேற்று அதிகரித்தது. எனினும் நெல் அறுவடை நடப்பதால் கபினி அணையில் இருந்து நீர் திறப்பு, ஒரு வாரமாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.