/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நில தரகு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் கிடைக்குமா?
/
நில தரகு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் கிடைக்குமா?
நில தரகு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் கிடைக்குமா?
நில தரகு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் கிடைக்குமா?
ADDED : ஏப் 21, 2025 07:19 AM
சேலம்: சேலத்தில், தமிழக நில தரகர் நலச்சங்கம் சார்பில், நில தரகு தொழிலாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. மாநில செயலர் வரதராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் மோகன் முன்னிலை வகித்தார்.
மாநில பொருளாளர் வீரராகவன் வரவேற்றார். மாநில தலைவர் அண்ணாதுரை, தரகர்கள் செயல்பாடு, எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகள், தீர்வுகாணும் முறைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, 'இன்றைய அதிநவீன தொழில்நுட்ப முறையில் நிலத்தரகர்கள் தொழில் முயற்சியா, பயிற்சியா' தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. முயற்சி தலைப்பில் பழனி, சசிகலா; பயிற்சி தலைப்பில் மஞ்சுநாதன், லலிதா பரமேஸ்வரி பேசினர். நடுவர் கலையமுதன், முயற்சி, பயிற்சி இரண்டும் தேவை என தீர்ப்பளித்தார்.
முன்னதாக ஆண்டுதோறும் ஏப்., 20ல் நிலதரகர் தினம் கொண்டாடுவதால், அதை அரசிதழில் வெளியிடுதல்; தமிழக அமைப்புசாரா தொழிலாளர் நலப்பட்டியலில் நில தரகு தொழிலாளர்களை இணைத்து தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவகணேசன், கணேசன், நமச்சிவாயம், பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

