/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோழி, ஆடுகள் வேட்டை வனத்துறை கவனிக்குமா?
/
கோழி, ஆடுகள் வேட்டை வனத்துறை கவனிக்குமா?
ADDED : செப் 20, 2024 01:48 AM
கோழி, ஆடுகள் வேட்டை
வனத்துறை கவனிக்குமா?
சங்ககிரி, செப். 20-
இடைப்பாடி அருகே சூரியமலையை ஒட்டிய கரட்டுபாளையம், மொத்தையனுார், கோபாலனுார் பகுதிகளில் சில நாட்களாக ஆடு, நாய்கள், கோழிகளை, இரவில் மர்ம விலங்குகள் கடித்து வருகின்றன. இதனால் தேவூரில் இருந்து கரட்டுபாளையம், ஆலத்துார், ரெட்டிபாளையம், மொத்தையனுார், கோபாலனுார் வழியே சங்ககிரிக்கு பைக்குகளில் செல்லும் மக்கள் அச்சத்தில் செல்கின்றனர். மேலும் கால்நடை வளர்க்கும் விவசாயிகள், மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதனால் வனத்துறையினர், சூரியமலையில் மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.