/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காற்றாலை மின் உற்பத்தி 609 மெகாவாட்டாக உயர்வு
/
காற்றாலை மின் உற்பத்தி 609 மெகாவாட்டாக உயர்வு
ADDED : பிப் 06, 2024 11:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: காற்றின் வேகம் அதிகரித்ததால், தமிழக காற்றாலை மின் உற்பத்தி நேற்று உயர்ந்தது.
தமிழக காற்றாலைகள் மூலம் தினமும் அதிகபட்சமாக, 8,894 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். காற்றின் வேகம் குறைந்ததால் கடந்த, 1ல் காற்றாலை மின் உற்பத்தி, 27 மெகாவாட்டாக கடுமையாக சரிந்தது. அதன் பின்பு காற்றின் வேகம் அதிகரித்ததால், காற்றாலை மின் உற்பத்தியும் படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. நேற்று முன்தினம், 461 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று, 609 மெகாவாட்டாக உயர்ந்தது.
விடுமுறை நாளான நேற்று முன்தினம், 14,462 மெகாவாட்டாக இருந்த தமிழக மின்நுகர்வு நேற்று, 15,990 மெகாவாட்டாக அதிகரித்தது.