/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் விமான நிலையத்தில் இருந்து குளிர்கால நேரப்படி விமானங்கள் இயக்கம்
/
சேலம் விமான நிலையத்தில் இருந்து குளிர்கால நேரப்படி விமானங்கள் இயக்கம்
சேலம் விமான நிலையத்தில் இருந்து குளிர்கால நேரப்படி விமானங்கள் இயக்கம்
சேலம் விமான நிலையத்தில் இருந்து குளிர்கால நேரப்படி விமானங்கள் இயக்கம்
ADDED : அக் 28, 2025 02:01 AM
ஓமலுார், சேலம் விமான நிலையத்தில், நேற்று முன்தினம் முதல், குளிர்கால புதிய அட்டவணை படி விமானங்கள் இயக்கம் துவக்கப்பட்டுள்ளன.
சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின் ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவையை, இண்டிகோ அலையன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது. கோடைக்கால அட்டவணை படி இயக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் குளிர்கால அட்டவணையின் கீழ், புதிய நேரப்படி இயக்கப்படுகிறது.
சேலம்-சென்னை இண்டிகோ விமானம் தினமும் மதியம், 3:20 மணிக்கு தரையிறங்கி, 3:40 மணிக்கு புறப்படுகிறது. சேலம்-கொச்சின் அலையன்ஸ் ஏர் விமானம், திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் மதியம், 1:55 மணிக்கு வந்து, 2:20 மணிக்கு புறப்படுகிறது.
சேலம்-பெங்களூரு அலையன்ஸ் ஏர் விமானம் ஞாயிறு, செவ்வாய், வியாழன். வெள்ளி ஆகிய நாட்களில் மதியம், 3:50 மணிக்கு வந்து, மாலை, 4:14 மணிக்கு புறப்படுகிறது. சனிக்கிழமை மட்டும் மாலை, 4:55 மணிக்கு வந்து 5:15க்கு புறப்படுகிறது.
சேலம்-ஹைதராபாத் இண்டிகோ விமானம் ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய நாட்களில் மதியம், 12:40 மணிக்கு வந்து, 1:05 மணிக்கு புறப்படுகிறது. சேலம்-பெங்களூரு இண்டிகோ விமானம், ஞாயிறு மட்டும் காலை, 10:40 மணிக்கு வந்து, 11:05 மணிக்கு புறப்படுகிறது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மதியம், 12:40 மணிக்கு வந்து, 1:05 மணிக்கு புறப்படுகிறது.

