/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கம்பியை கவ்வி விட்ட 'காக்கா' மின்சாரம் பாய்ந்து ஒயர்மேன் காயம்
/
கம்பியை கவ்வி விட்ட 'காக்கா' மின்சாரம் பாய்ந்து ஒயர்மேன் காயம்
கம்பியை கவ்வி விட்ட 'காக்கா' மின்சாரம் பாய்ந்து ஒயர்மேன் காயம்
கம்பியை கவ்வி விட்ட 'காக்கா' மின்சாரம் பாய்ந்து ஒயர்மேன் காயம்
ADDED : ஜூலை 25, 2025 01:38 AM
காரிப்பட்டி, :காரிப்பட்டி, கூட்டாத்துப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் பெரியசாமி, 45. காரிப்பட்டி கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக உள்ளார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, செல்லியம்பாளையம் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகே உள்ள மின்மாற்றியில் பழுதான, 'பீஸ்' கேரியரை மாற்றினார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். மக்கள், பெரியசாமியை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் நலமாக உள்ளார்.
இதுகுறித்து விசாரித்த பின், காரிப்பட்டி போலீசார் கூறியதாவது:
மின்சாரத்தை துண்டித்து விட்டு, பெரியசாமி, 'பீஸ் கேரியர்' போட்டுள்ளார். அப்போது ஒரு காகம், துண்டு கம்பி ஒன்றை வாயில் எடுத்துச்சென்றது. பின் அந்த கம்பியை விட்டுவிட்டது. அந்த துண்டு கம்பி மின் சப்ளை உள்ள கம்பி மீது விழுந்து, மறுமுனை மின்சாரம் துண்டிக்கப்பட்ட கம்பியில் மோதியது. இதனால் மின்மாற்றிக்கு மின் சப்ளை கிடைக்க, பெரியசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை, அவரே விசாரணையில் தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.