/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவர் வீட்டில் ஒயர்கள் திருட்டு
/
மருத்துவர் வீட்டில் ஒயர்கள் திருட்டு
ADDED : ஆக 21, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் பிரட்ஸ் சாலையை சேர்ந்தவர் கதிர்வேல் குமரன், 48. சேலம் அரசு மருத்துமனையில் மருத்துவராக உள்ளார்.
இவர் வீடு அருகே, கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அங்கு கடந்த, 8 நள்ளிரவு, 12:30 மணிக்கு, சில மர்ம நபர்கள் நுழைந்து, கட்டடத்துக்கு தேவையான, 25,000 ரூபாய் மதிப்பில், எலக்ரிக் ஒயர்களை திருடிச்சென்றனர். காலையில் கட்டுமான தொழிலாளர்கள், ஒயர்கள் இல்லாதது குறித்து, மருத்துவரிடம் தெரிவித்தார். அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.