sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மணமான 3 நாளில் கணவரை கைவிட்டு காதலனை கரம்பிடித்த பெண்

/

மணமான 3 நாளில் கணவரை கைவிட்டு காதலனை கரம்பிடித்த பெண்

மணமான 3 நாளில் கணவரை கைவிட்டு காதலனை கரம்பிடித்த பெண்

மணமான 3 நாளில் கணவரை கைவிட்டு காதலனை கரம்பிடித்த பெண்


ADDED : ஜன 31, 2025 02:39 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: திருமணமான 3 நாளில் கணவரை கைவிட்டு, காதலனை மணந்து கொண்ட பெண், பாதுகாப்பு கேட்டு, போலீசில் தஞ்சம-டைந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே துலுக்கனுாரை சேர்ந்த, மாதையன் மகள் மஞ்சு, 25. பி.எஸ்சி., பி.எட்., படித்த இவ-ருக்கு, கடந்த, 26ல் அதே பகுதியை சேர்ந்த, ஐயப்பன் மகன் சஞ்சய், 25, என்பவருடன் திருமணமானது. ஆனால் நேற்று முன்-தினம் மஞ்சு வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து தலை-வாசல் அருகே வசிக்கும், எம்.இ., படித்த மணிகண்டன், 28, என்பவரை, மஞ்சு, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திரு-மணம் செய்து கொண்டார். அதேநேரம், மணமான, 3 நாளில், மனைவியை கடத்திச்சென்றதாக, சஞ்சய், ஆத்துார் டவுன் போலீசில் புகார் அளித்தார். ஆனால் நேற்று, மஞ்சு, மணி-கண்டன், மணக்கோலத்தில், ஆத்துார் மகளிர் போலீசில் பாது-காப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது மஞ்சு, 'விருப்-பமின்றி சஞ்சய் என்பவருடன் திருமணம் செய்து வைத்துவிட்-டனர். அதனால் காதலன் மணிகண்டனை, திருமணம் செய்து கொண்டேன். அவருடன் வாழ விரும்புகிறேன்' என கூறினார். போலீசார், 'சஞ்சயுடன் நடந்த திருமணத்துக்கு விவகாரத்து வாங்-கினால் தான், வேறு திருமணம் செய்து கொள்ள முடியும்' என்-றனர். இதனால் மஞ்சு, வேறு வழியின்றி அவரது பாட்டி சரசு-வுடன் சென்றார்.






      Dinamalar
      Follow us