/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டியிடம் நுாதனமாக 5 பவுன் திருட்டு:வாகன சோதனையில் சிக்கிய பெண் கைது
/
மூதாட்டியிடம் நுாதனமாக 5 பவுன் திருட்டு:வாகன சோதனையில் சிக்கிய பெண் கைது
மூதாட்டியிடம் நுாதனமாக 5 பவுன் திருட்டு:வாகன சோதனையில் சிக்கிய பெண் கைது
மூதாட்டியிடம் நுாதனமாக 5 பவுன் திருட்டு:வாகன சோதனையில் சிக்கிய பெண் கைது
ADDED : நவ 03, 2025 02:21 AM
தாரமங்கலம்:தாரமங்கலம், சக்தி மாரியம்மன் கோவில் அருகே வசிப்பவர் பழனியம்மாள், 89. இவர், மகள் பெரியநாயகத்துடன் வசிக்கிறார். கடந்த ஜூலை, 31ல் பெரியநாயகம், கோவிலுக்கு சென்றார். அப்போது, ஒரு பெண், பழனியம்மாள் வீட்டுக்கு வந்து, 'காஸ் மானியம் வந்துள்ளதால் போட்டோ எடுக்க வேண்டும். நீங்கள் அணிந்துள்ள சங்கிலிகளை கழற்றிவிடுங்கள்' என்றார்.
பழனியம்மாளும், 2 மற்றும் 3 பவுன் சங்கிலிகளை கழற்றி, வீட்டிலிருந்த மர பீரோவில் வைத்தார். பின் அவரை போட்டோ எடுத்துவிட்டு, பக்கத்து தெருவில் அதிகாரிகள் உள்ளதாக கூறி, பழனியம்மாளை அழைத்துச்சென்று, ஒரு வீட்டு திண்ணையில் அமரவைத்துவிட்டு, பெண் மாயமானார். நீண்ட நேரமாகியும், பெண் வராததால், பழனியம்மாள் வீட்டுக்கு வந்து பீரோவில் பார்த்தபோது நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று, பவளத்தானுார் ரவுண்டானாவில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுசூகி மொபட்டில் வந்த பெண்ணை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஜெயந்தி, 35, என்பதும், பழனியம்மாளிடம் நகை திருடியதும் தெரிந்தது. அவரது மொபட்டில் வைத்திருந்த, 5 பவுன் சங்கிலியை மீட்ட போலீசார், மொபட்டை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

