ADDED : ஜூன் 05, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், இரும்பாலை, பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்த, ஜெய்னாப் பேகம், நேற்று முன்தினம், டவுன் பஸ்சில் புது பஸ் ஸ்டாண்ட் சென்று கொண்டிருந்தார். சுவர்ணபுரி ஸ்டாப் வந்தபோது, அருகே இருந்த பெண், ஜெய்னாப் பேகத்தின் மொபைல் போனை திருடினார்.
இதை கவனித்து அவர் கூச்சலிட, சக பயணியர், அந்த பெண்ணை சுற்றிவளைத்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துாரை சேர்ந்த சரசு, 50, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.