/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகள் இறப்பிற்கு நீதி கேட்டு வருவாய் அலுவலகம் முன் பெண் தற்கொலை முயற்சி
/
மகள் இறப்பிற்கு நீதி கேட்டு வருவாய் அலுவலகம் முன் பெண் தற்கொலை முயற்சி
மகள் இறப்பிற்கு நீதி கேட்டு வருவாய் அலுவலகம் முன் பெண் தற்கொலை முயற்சி
மகள் இறப்பிற்கு நீதி கேட்டு வருவாய் அலுவலகம் முன் பெண் தற்கொலை முயற்சி
ADDED : ஏப் 29, 2025 02:04 AM
சேலம்:
மகள் இறப்பிற்கு உரிய விசாரணை நடத்தி, மருமகன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, வருவாய் அலுவலகம் முன் பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சேலம், அழகாபுரம் காட்டு வளவு பூசாரி வட்டத்தை சேர்ந்தவர் கவிதா, 40, இவரது கணவர் அர்ஜூனன், கூலி வேலை செய்து வருகிறார். நேற்று, சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள, வருவாய் அலுவலகத்திற்கு வந்த கவிதா, மகளின் இறப்பிற்கு நீதி கிடைக்கவில்லை என கூறி பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்து பூச்சி மருந்தை பறித்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூரமங்கலம் போலீசார் மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். அதில் கவிதாவின் மகள் ஷாலினி, 24, மேட்டூரை சேர்ந்த பிரதீப் என்பவரை காதலித்து, 2022ல் திருமணம் செய்து கொண்டார். சூரமங்கலம் முல்லை நகரில் வசித்து வந்த நிலையில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, 2024 ஜூலை, 11ல் ஷாலினி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, மருமகன் பிரதீப் தன் மகளை கொலை செய்து துாக்கில் தொங்க விட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தாய் கவிதா சூரமங்கலம் போலீசில் புகார் அளித்திருந்தார். திருமணமாகி இரு ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. அம்பாயிரநாதன், உதவிகமிஷனர் நிலவழகன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் தற்கொலை என தெரியவந்தது. வழக்கை முடித்து வைத்தனர்.
ஆனால் விசாரணை சரியாக நடக்கவில்லை; மருமகன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நேற்று கவிதா தற்கொலைக்கு முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.