/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேஷன் அரிசி கடத்தல் குண்டாஸில் சிக்கிய பெண்
/
ரேஷன் அரிசி கடத்தல் குண்டாஸில் சிக்கிய பெண்
ADDED : ஏப் 25, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பரிமாளா, 51. இவர், கடந்த, 7ல், 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தினார். இதனால், சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் உள்ளன. இதனால் அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.

